பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா, நடிகையாகத் தமிழில் அறிமுகமாகும் படம் - பிரண்ட்ஷிப்.
இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஜூன், லாஸ்லியா போன்றோர் நடித்துள்ளார்கள். இயக்கம் - ஜான் பால் ராஜ் & ஷாம் சூர்யா. இசை - டி.எம். உதயகுமார்.
தணிக்கையில் பிரண்ட்ஷிப் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. செப்டம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள பிரண்ட்ஷிப் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. கோவையில் சைலேந்திரபாபு சார் செய்தது தான் சரி என்கிற வசனம் இப்படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது.