மோகன் ஜி இயக்கியுள்ள ருத்ர தாண்டவம் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷி ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் நடிப்பில் மோகன் ஜி இயக்கிய திரெளபதி படம் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியானது. நாடக்காதலை மையமாகக் கொண்ட இந்தப் படம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டது.
ருத்ர தாண்டவம் என்கிற மோகன் ஜி-யின் அடுத்த படத்தில் ரிச்சர்ட், கெளதம் மேனன், தர்ஷா குப்தா போன்றோர் நடித்துள்ளார்கள்.
தணிக்கையில் யு/ஏ பெற்றுள்ள ருத்ர தாண்டவம் படம் அக்டோபர் 1 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.