'நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது': பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் கார்த்தி 
செய்திகள்

'நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது': பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் கார்த்தி

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் கார்த்தி நிறைவு செய்துள்ளதை தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

DIN

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் கார்த்தி நிறைவு செய்துள்ளதை தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மத்திய பிரதேசம் மாநிலம் ஓர்ச்சாவில் நடைபெற்றது. இந்தப் படப்பிடிப்பில் நடிகர்கள் கார்த்தி, பிரகாஷ் ராஜ் ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்தப் படம் இரு பாகங்களாக உருவாகி வருகிறது. 

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் கார்த்தி தனது படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்துள்ளார். இதனை அவர் தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில் இளவரசி த்ரிஷா, நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது. இளவரசேசசசசச ஜெயம்ரவி என் பணியும் முடிந்தது! எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது ரசிகர்களை ஈர்த்துள்ளது.

முன்னதாக நடிகர் ஜெயம்ரவி தனது படப்பிடிப்பு காட்சிகளை நிறைவு செய்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தியும் நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'பொன்னியின் செல்வன்' படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ். பிரகாஷ் ராஜ், பிரபு, ரஹ்மான் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT