செய்திகள்

'ஒரே மாதிரியான முக பாவனைகளை வைத்துக்கொண்டு...' - விஜய் ஆண்டனி படத்தை விமரிசித்த இயக்குநர்

விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் படம் குறித்து இயக்குநர் நவீன் தனது சுட்டுரைப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

DIN

விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் படம் குறித்து இயக்குநர் நவீன் தனது சுட்டுரைப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன் திரைப்படம் இன்று (வெள்ளிகிழமை) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்க, நிவாஸ் கே.பிரசன்னா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். என்.எஸ்.உதயகுமார் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தில் இடம் ஸ்லம் ஆந்தம் என்ற பாடலை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், பிரேம்ஜி, விஜய் ஆண்டனி, நிவாஸ் கே. பிரசன்னா இணைந்து பாடியுள்ளனர். 

இந்த நிலையில் இந்தப் படம் குறித்து மூடர் கூடம் பட இயக்குநர் நவீன் தனது சுட்டுரைப் பக்கத்தில், 'ஒரே முக பாவனைகளை வைத்துக்கொண்டு ஒரு கதாநாயகன் இரண்டு மணி நேரம் நம்மை மகிழ்விக்கிறார். அம்மா சென்டிமென்ட் மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணி இணைந்தால் வெற்றி தான் மீண்டுமொருமுறை கோடியில் ஒருவன் நிரூபித்திருக்கிறது. மாஸ் காட்சியில் கூட நகைச்சுவை அழகாக வேலை செய்கிறது. திரையரங்குகளில் பார்க்கக் கூடிய படம்' என்று கருத்து தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்

இலவச பேருந்து பயண அட்டை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

பழைய அரங்கல்துருகம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

விவசாயிகள் நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

பாங்க் ஆஃப் பரோடா லாபம் 8% சரிவு!

SCROLL FOR NEXT