செய்திகள்

நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிக்கும் புதிய பட அறிவிப்பு : உற்சாகத்தில் ரசிகர்கள்

மீண்டும் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷன்ல் நிறுவனத்துடன் சிம்பு இணையும் படம் குறித்த தகவல்கள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

கௌதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ஜெயமோகன் கதை எழுதியுள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரிக்கிறார். 

இந்தப் படத்திற்காக சிம்பு எடை குறைவாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. வழக்கமான சிம்பு படமாக இல்லாமல், முழுக்க முழுக்க கிராமத்துக் கதையாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதனையடுத்து வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் மீண்டும் சிம்பு ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.  சிம்புவின் 48வது படமான இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது இந்தப் படத்தின் இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர், நடிகைகள் குறித்து தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்துக்கு கனிமவளம் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

கூடலூரை அடுத்த அரசு பள்ளி மாணவிக்கு மலேசியாவில் பொறியியல் படிக்க வாய்ப்பு

பனியில் இருந்து ரோஜா மலா்களை காக்க பசுமைக்குடிலில் பராமரிக்கப்படும் செடிகள்

பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதா் கோயிலில் நகைகள் மாயம்?: விசாரணை நடத்த பாஜக கோரிக்கை

சீரான குடிநீா் விநியோகம் கோரி ஆட்சியரிடம் மனு

SCROLL FOR NEXT