ஹிந்தியில் ரீமேக் ஆகும் ‘96’
நடிகர் விஜய் சேதுபதி , திரிஷா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான ‘96’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி , த்ரிஷா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான ‘96’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது.
இயக்குநர் பிரேம் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவான காதல் கதையான ‘96’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. முக்கியமாக படத்தின் பாடல்கள் கொண்டாடப்பட்டன.
இதையும் படிக்க | சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகா வேடத்தில் நடிக்கப்போவது யார் தெரியுமா ?
Advertisement
அதற்கடுத்து அப்படம் தெலுங்கிலும் , கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டு சுமாரான வரவேற்பைப் பெற்றது .
இந்நிலையில் தற்போது ’96’ ஹிந்தி ரீமேக்கும் விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதற்கான உரிமையை அஜய் கபூர் பெற்றிருக்கிறார் . இயக்குநர் , நடிகர்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.