'வலிமை' படம் நடிகர் அஜித் திரை வாழ்வில் என்றும் நினைவில் கொள்ளத்தக்கப் படமாக இருக்கும் என நடிகர் கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் 'ஆர்எக்ஸ்100' படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் கார்த்திகேயா. இவர் நானி கதாநாயகனாக நடித்த கேங் லீடர் படத்தில் வில்லனாக மிரட்டினார். தற்போது தமிழில் நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று (செவ்வாய்கிழமை) கார்த்திகேயாவின் பிறந்த நாள் என்பதால் வலிமை படத்தில் இருந்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சிறப்பு போஸ்டர் வெளியானது. மேலும், அஜித் ரசிகர்கள் மங்காத்தா படத் தோற்றத்தில் அஜித் இருக்கும் புகைப்படத்தை, கார்த்திகேயாவின் புகைப்படத்துடன் இணைத்து புதிய போஸ்டர் ஒன்றை உருவாக்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தப் போஸ்டரைப் பகிர்ந்த கார்த்திகேயா, ஒப்பற்ற உங்கள் அன்புக்கு நன்றி. வலிமை திரைப்படம் நடிகர் அஜித்தின் திரை வாழ்வில் என்றும் நினைவுகொள்ளத்தக்க படமாக இருக்கும் என நான் சத்தியம் செய்கிறேன். அதற்காக என்னால் இயன்ற உழைப்பை வழங்குவேன். எனக்கு மங்காத்தா படம் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.