செய்திகள்

'கர்ணன்' படத்தை விட, 'ருத்ர தாண்டவம்' இரண்டு மடங்கு புகழைப் பெறும்: பிரபல நடிகர் கருத்து

கர்ணன் படத்தை விட, ருத்ர தாண்டவம் இரண்டு மடங்கு புகழைப் பெறும் என நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார். 

DIN

கர்ணன் படத்தை விட, ருத்ர தாண்டவம் இரண்டு மடங்கு புகழைப் பெறும் என நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார். 

திரௌபதி படத்துக்குப் பிறகு மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ருத்ர தாண்டவன். ரிஷி ரிச்சர்டு கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடித்துள்ளார். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், ராதா ரவி, தம்பி ராமையா, மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஃபாரூக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு, ஜூபின் இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. 

விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, இந்தப் படத்தில் எது நியாமானதோ அதனை இயக்குநர் பேசியிருக்கிறார். யார் மனதையும் புண்படுத்தவில்லை. இந்தப் படத்தை பார்த்துவிட்டு மற்றவர்கள் திருந்த வேண்டும். அக்டோபர் 1 ஆம் தேதி வெளியான பிறகு படம் பேசு பொருளாகும். 

கர்ணன் படம் பெற்ற புகழை விட இரண்டு மடங்கு புகழை இந்தப் படம் பெறும். நான் வணங்கும் ஒரு சல தலைவர்களில் அம்பேத்கரும் ஒருவர். இந்தியாவிற்காக அரசியல் சாசன சட்டத்தை எழுதிக்கொடுத்தவர். குறிப்பிட்ட ஒரு சாதிக்காக அரசியல் சாசனம் சட்டம் எழுதவில்லை என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவேகானந்தா் ஜெயந்தி நாளில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை

காலமானாா் நா. பிரகாசம்

முடிவுக்கு வந்தது தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

972 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

திருமலையில் 76,447 பக்தா்கள் தரிசனம்!

SCROLL FOR NEXT