முகப்பு
செய்திகள்

சிவகார்த்திகேயன் வெளியிட்ட பிக்பாஸ் கவினின் 'லிஃப்ட்' பட முன்னோட்ட விடியோ

பிக்பாஸ் கவின் மற்றும் பிகில் அம்ரிதா இணைந்து நடித்துள்ள லிஃப்ட் பட முன்னோட்டத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சுட்டுரைப் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

பிக்பாஸ் கவின் மற்றும் பிகில் அம்ரிதா இணைந்து நடித்துள்ள லிஃப்ட் பட முன்னோட்டத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சுட்டுரைப் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார். 

கவின் - பிகில் அம்ரிதா நடித்துள்ள படம் லிஃப்ட்.  இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி, வினித் வரபிரசாத் இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. 

தற்போது இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சுட்டுரைப் பக்கம் மூலம் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து சொல்லியுள்ளார். 

Advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கவின் நடித்து வெளியாகும் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்தப் படத்தில் இருந்து சிவகார்த்திகேயன் பாடிய என்ன மயிலு பாடல் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது லிஃப்ட பட முன்னோட்டத்தை கவின் ரசிகர்கள் பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments