செய்திகள்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் களமிறங்கியிருக்கும் நடிகர் ஜெய் சங்கரின் மகன்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் நடிகர் ஜெய் சங்கரின் மகன் சஞ்சய் சங்கர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். 

DIN

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் நடிகர் ஜெய் சங்கரின் மகன் சஞ்சய் சங்கர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தத் தொடரில் சமையல் கலையில் ஆர்வம் கொண்ட பாக்கியலட்சுமி, சமையல் செய்து அதனை விநியோகித்து வருகிறார். அப்போது அவருக்கு ஒரு தொழிலதிபரின் அறிமுகம் கிடைக்கிறது. அவர் மூலம் சில வாய்ப்புகள் பாக்கியலட்சுமிக்கு கிடைக்கிறது.

அந்தத் தொழிலதிபர் நடித்திருப்பவர் நடிகர் சஞ்சய் சங்கர். இவர் நடிகர் ஜெய் சங்கரின் இளைய மகன். ஜெய் சங்கரின் மூத்த மகன் விஜய் சங்கர் கண் மருத்துவராக இருந்து வருகிறார். 

நடிகர் சஞ்சய் சங்கர் இசை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். சஞ்சய் சங்கருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பாக்கியலட்சுமி வேடத்தில் நடிக்கும் சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சஞ்சய் சங்கரி் வருகைக்கு பிறகு இந்தத் தொடர் இன்னும் விறுவிறுப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முசிறியின் முக்கிய இடங்களில் 30 கண்காணிப்புக் கேமராக்கள்

ஆற்றுப்படுகையில் மண் எடுத்த லாரி பறிமுதல்

ஜூனியா் பெண்கள் சாம்பியன் கபடி போட்டி

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை

SCROLL FOR NEXT