முகப்பு
செய்திகள்

வெளியான சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' பட முன்னோட்ட விடியோ

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'டாக்டர்'. அனிருத் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. 

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, வினய், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த வருடமே வெளியாகியிருக்க வேண்டிய இந்தப் படம் கரோனா பரவல் காரணமாக தள்ளிப்போனது. 

முதலில் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த இந்தப் படம் தற்போது திரையரங்கில் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இந்தப் படத்தைக் காண நடிகர் விஜய் ரசிகர்களிடமும் ஆவல் அதிகரித்துள்ளது.

காரணம் டாக்டர் பட இயக்குநரான நெல்சன் திலிப்குமார் அடுத்ததாக விஜய்யை கதாநாயகனாக வைத்து பீஸ்ட் இயக்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →