செய்திகள்

உலக அளவில் நிச்சயம் பார்க்கவேண்டிய 5 படங்கள் பட்டியலில் தனுஷின் கர்ணன் - சர்வதேச நாளிதழ் புகழாரம் : ரசிகர்கள் கொண்டாட்டம்

தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள உலக அளவில் பார்க்கவேண்டிய 5 படங்களின் பட்டியலில் நடிகர் தனுஷின் கர்ணன் இடம் பெற்றுள்ளது.

DIN

தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள உலக அளவில் பார்க்கவேண்டிய 5 படங்களின் பட்டியலில் நடிகர் தனுஷின் கர்ணன் இடம் பெற்றுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியான படம் கர்ணன். இந்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்திருந்தார். திரையரங்கில் வெளியான இந்தப் படம் விமரிசன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. 

இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்க, லால், யோகி பாபு, நட்டி என்கிற நடராஜன், லக்ஷ்மி பிரியா, ஜி.எம்.குமார், பூ ராமு, அழகம் பெருமாள், சண்முகராஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். 

இந்த நிலையில் சர்வதேச நாளிதழான தி நியூயார்க் டைம்ஸ் , உலக அளவில் பார்க்க வேண்டிய 5 படங்களைப் பரிந்துரைத்துள்ளது. அந்தப் பட்டியலில் கர்ணன் படமும் இடம் பெற்றுள்ளது. அந்தப் பட்டியலில் இந்திய அளவில் இடம் பெற்ற ஒரே படம் கர்ணன் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

1990களில் நடைபெற்ற உண்மைக் கதையை எடுத்துக்கொண்டு மிக நேர்த்தியாக இயக்குநர் மாரி செல்வராஜ் திரைக்கதையை அமைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. தமிழ் சூப்பர் ஸ்டார் தனுஷ் மிகுந்த ஆக்ரோஷமாக தனது வேடத்தைக் கையாண்டிருப்பதாகவும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தகவல் தனுஷ் ரசிகர்களிடையே உற்சாகத்தை அளித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திட்டமிட்ட தப்பாட்டம்!

ஆமைகளை விடுவிக்கும்போது வலைகள் சேதமடைந்தால் நிவாரணம்: மாவட்ட வனத்துறை அலுவலா்

லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்: நெல் இயக்கம் செய்யும் பணிகள் தீவிரம்

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

ஓஎன்ஜிசி நிலையத்தில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி

SCROLL FOR NEXT