முகப்பு
செய்திகள்

அதிவேகமாக 1 கோடி பார்வையாளர்களைக் கடந்த 'புஷ்பா' திரைப்படத்தின் பாடல் 

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில்  ஐந்து  மொழிகளில் அதிரடி கதைக்களத்துடன் இரண்டு பாகமாக  தயாராகி வரும்  ' புஷ்பா ' திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது

Updated On : 16 ஆகஸ்ட், 2021 at 10:50 AM
அதிவேகமாக 1 கோடி பார்வையாளர்களைக் கடந்த 'புஷ்பா' திரைப்படத்தின் பாடல் 
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:25 AM

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில்  ஐந்து  மொழிகளில் அதிரடி கதைக்களத்துடன் இரண்டு பாகமாக  தயாராகி வரும்  ' புஷ்பா ' திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தை திரையில் காண ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில்  படத்தின் இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் 'தாக்கோ தாக்கோ மேகா' என்கிற முதல் பாடலை  கடந்த வெள்ளிக்கிழமை  மதியம் வெளியீடு செய்திருந்தார்.

ஐந்து மொழிகளில் ஐந்து பாடகர்கள் பாடிய அப்பாடல் வெளியான இரண்டு நாட்களில் தெலுங்கில் மட்டும் அதிவேகத்தில்  1.40 கோடி  பார்வையாளர்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 

Advertisement

தமிழில் 25 லட்சம் பார்வையாளர்களைக் கடந்த  'ஓடு ஓடு ஆடு' என்கிற வரியில் வெளியான இப்பாடலை  பென்னி தயாள் பாடியிருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.