முகப்பு
செய்திகள்

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவலுக்கு நடிகர் ராமராஜன் தரப்பில் விளக்கம்

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவலுக்கு நடிகர் ராமராஜன் தரப்பிலிருந்து அவர் பூரண நலத்துடன் இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:23 AM
பகிர்:

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவலுக்கு நடிகர் ராமராஜன் தரப்பிலிருந்து அவர் பூரண நலத்துடன் இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

1980களில் தமிழில் முன்னணி கதாநாயகனாக விளங்கியவர் நடிகர் ராமரஜான். நீண்ட காலமாக திரைப்படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. 

இந்த நிலையில், ராமராஜன் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நடிகர் ராமராஜன் பூரண நலத்துடன் இருக்கிறார். யாரும் இந்த வதந்தியை நம்ப வேண்டாம். 

இரண்டு படங்களுக்குத் தனது கதையைத் தந்துள்ள ராமராஜன் அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்கு தன்னைத் தயார்படுத்தி வருகிறார் என்பதே உண்மை. ராமராஜன் உடல் நலத்துடனும் மன வலிமையுடனும் இருக்கிறார். விரைவில் அவர் நடிக்கும் படத்தின் தொடக்க விழாவில் கலந்துகொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →