செய்திகள்

'மன்மத லீலை' படத்தின் முதல் காட்சி ரத்து: ரசிகர்கள் ஏமாற்றம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மன்மதலீலை திரைப்படம் இன்று முதல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

DIN

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மன்மதலீலை திரைப்படம் இன்று முதல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மன்மத லீலை திரைப்படத்தை நிபந்தனைகளுடன் வெளியிடலாம் என்று நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்த நிலையில், முதல் காட்சி ரத்தாகியுள்ளதால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

மன்மத லீலை திரைப்படத்தை தயாரித்த ராக்ஃபோா்ட் நிறுவனம் மீது இரண்டாம் குத்து படத்தை தயாரித்த ப்ளையிங் ஹாா்ஸ் பிச்சா்ஸ் நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது. 

இரண்டாம் குத்து திரைப்படத்தின் விநியோக உரிமையை பெற்றதில், ராக்ஃபோா்ட் நிறுவனம் மீதமுள்ள தொகையை செலுத்தவில்லை என்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ப்ளையிங் ஹாா்ஸ் ரூ.30 லட்சத்தை 4 வாரங்களில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் மன்மத லீலை படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதனைத் தொடர்ந்து இன்று திரையரங்குகளில் மன்மத லீலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், பெரும்பாலான திரையரங்குகளில் முதல் காட்சி ரத்தாகியுள்ளது. முதல் காட்சியை திரையிடுவதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்பதால் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மாநாடு வெற்றிக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மன்மத லீலை படத்தில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். பிரேம் ஜி  இசையமைத்துள்ளார். மணிவண்ணன் இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரன்பே... ஃபெமினா!

மதராஸி வசூல் எவ்வளவு? படக்குழு அறிவிப்பு!

அதிவேக அரைசதம் விளாசிய நமீபிய வீரர்; ஜிம்பாப்வேவுக்கு 205 ரன்கள் இலக்கு!

நீ உச்சத்திலேயே இரு! விஜய் மீது சீமான் காட்டம்?

பறவை மோதல்? ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசர தரையிறக்கம்!

SCROLL FOR NEXT