நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' டிரெய்லர் வெளியானது
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் டிரெய்லர் வெளியானது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள படம் 'பீஸ்ட்'. 'டாக்டர்' படத்துக்கு பிறகு இயக்குநர் நெல்சன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையில் இந்தப் படத்திலிருந்து அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பீஸ்ட் திரைப்படம் வருகிற 13 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பீஸ்ட் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படத்துடன் யஷ் நடித்துள்ள கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளதால் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, இயக்குநர் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.