செய்திகள்

விஜய்க்காக களமிறங்கும் பிரபல ஹிந்தி நடிகர்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

பீஸ்ட் பட ஹிந்தி டிரெய்லரை பிரபல நடிகர் வருண் தவான் வெளியிடுகிறார். 

DIN

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

தமிழ் பதிப்பின் டிரெய்லர் ஏற்கனவே கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியான நிலையில் இந்தப் படத்தின் ஹிந்தி டிரெய்லர் இன்று மாலையும், தெலுங்கு டிரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பீஸ்ட் பட ஹிந்தி டிரெய்லரை ஹிந்தி நடிகர் வருண் தவான் வெளியிடுகிறார். மேலும்  இன்று மாலை 4 மணிக்கு அரபிக் குத்து பாடலின் தெலுங்கு மற்றும் ஹிந்தி பதிப்பு வெளியாகவுள்ளது. 

பீஸ்ட் படத்துடன் கேஜிஎஃப் படம் வெளியாகவுள்ளதால் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீஸ்ட் பாடல்கள் இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கேஜிஎஃப் முதல் பாகத்தின் வெற்றி காரணமாக, கேஜிஎஃப் 2 படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷேக் ஹசீனாவின் அறிக்கைகளை வெளியிட்டால் கடும் நடவடிக்கை! ஊடகங்களுக்கு வங்கதேச அரசு எச்சரிக்கை!

அமித் ஷாவுக்கு தேநீர் விருந்து அளித்த நயினார் நாகேந்திரன்

சென்னையில் கனமழை

ஹீரோ ஆசிய ஹாக்கி 2025: கோப்பையை அறிமுகப்படுத்தினார் துணை முதல்வர் உதயநிதி!

இந்தியாவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு!

SCROLL FOR NEXT