செய்திகள்

கவிஞர் பிரமிள் பற்றிய ஆவணப்படத்தைத் தயாரிக்கிறார் வெற்றிமாறன்

DIN

மறைந்த தமிழ் கவிஞரும் எழுத்தாளருமான  பிரமிளைப் பற்றிய ஆவணப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கிறார்.

தமிழ் நவீனக் கவிதை முன்னோடிகளில் ஒருவர் கவிஞர் பிரமிள்(தருமு சிவராம்). இலங்கை திருகோணமலையில் பிறந்தவர். சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் என புனைவு எழுத்துகளில் மிக முக்கியமானவராகத் தமிழ் இலக்கியத்தில் அறியப்பட்டவர்.

இந்நிலையில், பிரமிள் வாழ்வு பற்றிய ஆவணப்படத்தை ‘காற்றின் தீராத பக்கங்களில்’ என்கிற தலைப்பில் இயக்குநர் வெற்றிமாறன் தன்னுடைய ’கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

இயக்குநர் தங்கம் இயக்கத்தில் உருவாகும் இந்த ஆவணப்படத்திற்கு வேல்ராஜ்  ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் படப்பிடிப்பு பிரமிள் காலமான வேலூர் மாவட்டம் கரடிக்குடி என்கிற ஊரில் தொடங்கட்டப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் வெளியாகும் எனவும் பிரமிள் சமாதி இருக்கும் அதே கரடிக்குடியில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணியையும் வெற்றிமாறன் ஏற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து முகநூலில் பகிர்ந்த எழுத்தாளர், பிரமிள் படைப்புகளின் தொகுப்பாசிரியர் கால சுப்ரமணியம் ‘எழுத்தாளர்களைப் பற்றிய வழக்கமான விவரணப்படத்திலிருந்து இது முற்றிலும் புதிய கோணத்தில் அமையவுள்ளது. அம்பாசமுத்திரம் குருவனத்தில் அடுத்த வாரம் ஓவியர் சந்துரு, பிரமிள் சிற்பத்தை வடிக்கவுள்ளார். அதுவும் படமாக்கப்படும். குருவனத்தில் பிரமிளைப் பற்றிப் பேச, சந்துரு என்னைப் பணித்துள்ளார். அது அநேகமாக பிரமிள் பிறந்தநாள் ஏப்ரல் 20ல் அமையலாம். (அன்று வேலைநாள் என்பதால் வாசக அன்பர்கள் அங்கு வர வசதியாக 17 அல்லது 24 ஞாயிறு சந்திப்பை வைக்கும்படி கூறியுள்ளேன்.) அந்த நிகழ்ச்சிகளையும் ஆவணப்படுத்திவிட்டு, திருநெல்வேலி பிரமிள் நூலகத்தையும் ஆவணமாக்க நினைத்துள்ளனர் படக்குழுவினர்’ எனத் தெரிவித்துள்ளார்.

பிரமிளின் ஒரு கவிதை, 

 ‘சிறகிலிருந்து பிரிந்த

இறகு ஒன்று

காற்றின் தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச் செல்கிறது’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT