நடிகர் சோனு சூட்டுக்கு கோல்டன் விசா வழங்கிய துபை 
செய்திகள்

நடிகர் சோனு சூட்டுக்கு கோல்டன் விசா வழங்கிய துபை

நடிகர் சோனு சூட்டுக்கு துபை அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது.

DIN

நடிகர் சோனு சூட்டுக்கு துபை அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிநாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு நீண்ட கால குடியுரிமையை வழங்கும் நோக்கில் ‘கோல்டன் விசா’ என்ற சிறப்பு விசாவை அந்நாட்டின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிமுகப்படுத்தினார்.

இந்தியாவின் பல்வேறு திரைப்பிரபலங்களுக்கும் கோல்டன் விசா பெற்று வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகரான சோனு சூட்டுக்கு வெள்ளிக்கிழமை கோல்டன் விசா வழங்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய சோனு சூட், "கோல்டன் விசாவிற்காக துபை அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். துபை எனக்கு மிகவும் பிடித்தமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT