முகப்பு
செய்திகள்

அருண் விஜய் நடித்த 'ஓ மை டாக்’ படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான ‘ஓ மை டாக்’ திரைப்படத்தில் டீசர் வெளியானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான ‘ஓ மை டாக்’ திரைப்படத்தில் டீசர் வெளியானது.


நடிகர் சூர்யா - ஜோதிகா இணைந்து தங்களது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், உடன்பிறப்பே, ஜெய் பீம், ஓ மை டாக் என 4 படங்களை தயாரித்தனர். இந்தப் படங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பரில் அடுத்தடுத்து வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

முதல் 3 படங்கள் அறிவித்தபடி அமேசானில் வெளியானது. ஆனால் ஓ மை டாக் திரைப்படம் வெளியாகவில்லை. 

இந்நிலையில், வருகிற ஏப்ரல்-24 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் விஜயகுமார், அருண் விஜய் அவரது மகன் ஆர்னவ், வினய், மகிமா நம்பியார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சரோவ் சண்முகம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.