‘காதலும் அடிமைத்தனத்துல இருந்து உலகத்த விடுவிக்கும்’: கதிர் திரைப்பட டிரைலர் வெளியீடு
துவாரகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் தினேஷ் இயக்கியுள்ள கதிர் திரைப்படத்தின் டிரைலரை சனிக்கிழமை படக்குழுவினர் வெளியிட்டனர்.
துவாரகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் தினேஷ் இயக்கியுள்ள கதிர் திரைப்படத்தின் டிரைலரை சனிக்கிழமை படக்குழுவினர் வெளியிட்டனர்.
துவாரகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கதிர். இயக்குநர் தினேஷ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தன.
இதையும் படிக்க | லெஜண்ட் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு
Advertisement
Advertisement
நாயகனாக வெங்கடேஷ் நடித்துள்ளார். நடிகை பாவ்யா த்ரிகா நாயகியாக அறிமுகமாகியுள்ளார். புதுமுகங்கள் பலரும் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகர் சந்தோஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிக்க | ஆஸ்கர் விழாவில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை
ஜெயந்த் சேதுமாதவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் சனிக்கிழமை வெளியிட்டனர். ஏப்ரல் 29ஆம் தேதி இந்தத் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.