முகப்பு
செய்திகள்

'வராங்க.. வராங்க..': செல்வராகவன் - தனுஷின் 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு நிறைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 11 ஏப்ரல், 2022 at 2:50 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:26 PM


செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ள படம் நானே வருவேன். 

இந்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக எல்லி ஏவிஆர்ராம் நடித்துள்ளார். 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தெரிவித்துள்ளார். 

செல்வராகவன் - யுவன் கூட்டணியில் உருவான பாடல்கள் தனித்துவமானவை. காலம் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவருகின்றன. இதன் காரணமாக நானே வருவேன் பட பாடல்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.