செய்திகள்

விஜய்யின் 'தளபதி 66'-ல் ராஷ்மிகாவுக்கு முன் நடிக்கவிருந்தது இவரா ? மாற்றத்துக்கு காரணம் ?

நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தில் ராஷ்மிகாவுக்கு முன்னதாக நடிக்கவிருந்த நடிகை குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார். 

DIN

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படம் வருகிற 13 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இதனை முன்னிட்டு பெரும்பாலான திரையரங்குகளில் பீஸ்ட் படத்தின் முதல் நாள் டிக்கெட்டுகள் விற்றுதீர்ந்துவிட்டன. அந்த அளவுக்கு இந்தப் படத்தைக் காண ரசிகர்களிடையே ஆவல் அதிகரித்துள்ளது. 

பீஸ்ட் படம் இந்திய அளவில் வெளியாகவுள்ளதால், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. பீஸ்ட் படத்தின் பாடல்களும் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருக்கிறது. 

தெலுங்கில் பீஸ்ட் படத்தை தெலுங்கை தயாரிப்பாளர் தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேசன்ஸ் சார்பாக வெளியிடுகிறார். இவர் நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் பீஸ்ட் படம் தொடர்பாக தயாரிப்பாளர் தில் ராஜூ, நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய தயாரிப்பாளர் தில் ராஜு, ''பூஜா திறமையான நடிகை. தளபதி 66 படத்தில் அவரை நடிக்க வைக்க திட்டமிட்டோம். ஆனால் அடுத்தடுத்து விஜய்யுடன் நடித்தால் நன்றாக இருக்காது என்று எங்களது முடிவை மாற்றிக்கொண்டோம்'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வா வாத்தியார் அவர்களுக்கான படம் கிடையாது... நலன் குமாரசாமி!

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

ஜன நாயகனுக்காக காத்திருந்தேன்! பராசக்திக்கு வாழ்த்துகள்! அண்ணாமலை பேட்டி! | BJP

”விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறோமா?” பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் | TVK | BJP

திருவனந்தபுரம்: திருமண நாளிலேயே சாலை விபத்தில் இளைஞர் பலி

SCROLL FOR NEXT