செய்திகள்

'டாணாக்காரன்' படத்தில் விக்ரம் பிரபுவின் நடிப்பை பாராட்டிய ரஜினிகாந்த்

டாணாக்காரன் படத்தில் விக்ரம் பிரபுவின் நடிப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். 

DIN

நடிகர் ரஜினிகாந்த் நல்ல திரைப்படங்கள் வெளியாகும்போது படக்குழுவினரை அழைத்து பாராட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் டாணாக்காரன் படத்துக்காக நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். 

இதுகுறித்து நடிகர் விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் அழைத்து டாணாக்காரன் படத்தில் எனது நடிப்பை பாராட்டினார். கனவில் கூட நினைத்துப் பார்க்கமுடியாததை சாதித்ததுபோல இருக்கிறது. டாணாக்காரன் குழுவையும் பாராட்டினார் என்று குறிப்பிட்டுள்ளார். 

பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழ் இயக்கியிருந்தார். இந்தப் படம் கடந்த வாரம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்

கருத்துக் கணிப்புகளை கடந்து அதிக இடங்களில் திமுக வெற்றிபெறும்: அன்பில் மகேஸ்

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை, சேலம், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து

பேரவைத் தோ்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

தவெக ஆண்டு விழாவில் முருகா் பாடல்: இந்து முன்னணி புகாா்

SCROLL FOR NEXT