செய்திகள்

நானி மற்றும் நஸ்ரியாவின் 'அடடே சுந்தரா' - வெளியானது டீசர்

நானி மற்றும் நஸ்ரியா இணைந்து நடித்துள்ள 'அடடே சுந்தரா' பட டீசர் வெளியானது. 

DIN

தமிழில் 'நான் ஈ', 'ஆஹா கல்யாணம்', 'வெப்பம்' உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நானி. தெலுங்கில் முன்னணி நடிகரான நானி வித்தியாசமான படங்களின் மூலம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறார். 

இந்த நிலையில் அவர் தற்போது நடித்துள்ள படம் 'அன்டே சுந்தரானிகி'. இந்தப் படம் தமிழில் 'அடடே சுந்தரா' என்ற பெயரில் வெளியாகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்தப் படத்தில் நஸ்ரியா நடித்துள்ளார். இது நஸ்ரியாவுக்கு முதல் தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இரண்டு மதத்தை சேர்ந்தவர்கள் காதலிப்பதன் காரணமாக உருவாகும் பிரச்னைகளை இந்தப் படம் பேசுவதாக தெரிகிறது. 

இந்தப் படத்தில் ரோகினி, நதியா, அழகம் பெருமாள், ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விவேக் சாகர் இந்தப் படத்துக்கு இசையமைக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் ஆத்ரேயா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிவேதா பெத்துராஜுக்கு விரைவில் திருமணம்!

கர்நாடகத்தில் தொடரும் கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை!

நீலகிரிக்கு ஆரஞ்சு; கோவை, திண்டுக்கல்லுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

உத்தரப்பிரதேசத்தில் கொட்டிய பண மழை!

மெஸ்ஸி மேஜிக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இன்டர் மியாமி!

SCROLL FOR NEXT