செய்திகள்

கவினின் 'டாடா' பட முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட பா.ரஞ்சித்

கவின் நடித்துள்ள  டாடா படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார். 

DIN

கவின் நடித்துள்ள  'டாடா' படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனாகாணும் காலங்கள், சரவணன் மீனாட்சி தொடர்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார். 

இதன் பிறகு அவர் நடித்த லிஃப்ட் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கவின் நடித்த ஆகாஷ் வாணி என்ற தொடர் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியானது. 

விக்னேஷ் சிவன் - நயன்தாரா இணைந்து தயாரித்துள்ள ஊர் குருவி படத்தில் கவின் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் கவின் தற்போது ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் 'டாடா' படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக 'பீஸ்ட்' பட நடிகை அபர்ணா தாஸ் நடிக்கிறார். இந்தப் படத்தை கணேஷ் கே.பாபு என்பவர் இயக்குகிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT