முகப்பு
செய்திகள்

‘லக்கி பையன் ராம்போ’:காத்துவாக்குல ரெண்டு காதல் டிரைலர் வெளியீடு

நடிகர் விஜய்சேதுபதி, நடிகைகள் சமந்தா, நயன்தாரா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
‘லக்கி பையன் ராம்போ’:காத்துவாக்குல ரெண்டு காதல் டிரைலர் வெளியீடு
பகிர்:

நடிகர் விஜய்சேதுபதி, நடிகைகள் சமந்தா, நயன்தாரா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.

நானும் ரௌடி தான் படத்துக்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி நயன்தாரா, அனிருத் இணைந்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்தில் சமந்தாவும் மற்றுமொரு கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஏற்கெனவே இந்தத் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.