செய்திகள்

'தளபதி 66' படத்தில் விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் ஷாம்

DIN

'தளபதி 66' படத்தில் பிரபல நடிகர் ஷாம் விஜய்யின் அண்ணனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு வம்சி இயக்கத்தில் 'தளபதி 66' படத்தில் நடித்துவருகிறார். பீஸ்ட் படம் ரசிகர்களைப் பெரிதும் கவரவில்லை என்பதால் அவரது ரசிகர்கள் தளபதி 66 படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். 

இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகர் விஜய்யுடன் நாயகி ராஷ்மிகா இருக்கும் புகைப்படங்கள் வரைலானது. தற்போது இந்தப் படத்தின் பாடல் படமாக்கப்பட்டது.

இதனையடுத்து ராமோஜி ஃபிலிம் சிட்டியில் முக்கிய காட்சிகள் படமாக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக பிரம்மாண்டமான வீடு ஒன்றின் செட் உருவாக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிகர் மோகன் நடிக்கவிருப்பதாக தகவல் பரவியது. இந்த நிலையில் நடிகர் ஷாம் இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு அண்ணனாக நடிக்கிறாராம். நடிகர் ஷாம்' குஷி' படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் நடிகர் விஜய்யின் நண்பராக சில காட்சிகளில் நடித்திருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது. 

தளபதி 66 திரைப்படம் பூவே உனக்காக போல குடும்ப திரைப்படமாக இருக்கும் என தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்தார். இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT