செய்திகள்

யுவன் சங்கர் ராஜா இசையில் லவ் டுடே! வெளியானது முதல் பாடல்

DIN

யுவன் சங்கர் ராஜா இசையில் 'லவ் டுடே' திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது. கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இத்திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். 

ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் 'லவ் டுடே'. 

இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையத்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல்பார்வை போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. பிரதீப் ரங்கநாதன் வரிகளில் யுவன் இந்த பாடலைப் பாடியுள்ளார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

SCROLL FOR NEXT