ராஷ்மிகா மந்தனா 
செய்திகள்

புஷ்பா 2-ல் சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா: தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி

புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டாவுடன் 'கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்ததற்குப் பின் பிரபலமான இவர் தெலுங்கில் முக்கிய நடிகர்களின் நாயகியாக ஒப்பந்தமாகி வருகிறார். 

அந்த வகையில், அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்து ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘புஷ்பா’ படத்தில் நாயகியாக நடித்து ராஷ்மிகா அதிகமான ரசிகர்களைக் கவர்ந்ததுடன் அப்படம் அவருக்கு பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது.

அதனைத் தொடர்ந்து, தமிழில் சுல்தான் திரைப்படத்தில் அறிமுகமானர். ஹிந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், புஷ்பா - 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதால் அந்தப் பாகத்திற்காக நடிகை ராஷ்மிகா மந்தனா தன் சம்பளத்தை ரூ.1 கோடியிலிருந்து ரூ.4 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், இவரை ஒப்பந்தம் செய்யக் காத்திருந்த தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது, ராஷ்மிகா நடிகர் விஜயுடன் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்: உயிரைப் பணயம் வைத்து மீட்ட ரயில்வே காவலர்

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

கரூர் பலி: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பாஜக கவுன்சிலர் மனு!

கரூர் தவெக கூட்ட நெரிசல் பொதுநல வழக்கு இன்று விசாரணை!

தவறு செய்தோர் தப்பிக்க பயன்படுத்தும் வாஷிங் மெஷின் பாஜக! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT