செய்திகள்

காமன்வெல்த் நிறைவு விழாவில் யுவன் பாடல்(விடியோ)

காமன்வெல்த் நிறைவு விழாவில் யுவன் சங்கர் ராஜாவின் பாடலுக்கு நடனம்..

DIN

காமன்வெல்த் நிறைவு விழாவில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த அவன் இவன் திரைப்படத்தின் ‘தியா தியா டோல்’ பாடலுக்கு கலைஞர்கள் நடனமாடினர்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று நிறைவுபெற்றது.

இந்தப் போட்டியில், இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என 61 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்தது.

இந்நிலையில், நிறைவு விழா கலைநிகழ்ச்சியில், யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வெளியான அவன் இவன் திரைப்படத்தின் பிரபல ‘தியா தியா டோல்’ பாடலுக்கு இசைக்கலைஞர்கள் நடனமாடினர்.

சர்வதேச அரங்கில் யுவன் சங்கர் ராஜாவின் பாடலுக்கு கலைஞர்கள் நடனமாடிய விடியோவை யுவன் ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கி ஊழியர் சங்கங்கள் போராட்டம்: வாடிக்கையாளர் சேவைக் குறைபாட்டைத் தவிர்க்க வங்கிகளுக்கு வலியுறுத்தல்

கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் போராட்டம்: ஆசிரியா்கள் முடிவு

சமபந்தி விருந்து...

பன்றித் தொல்லை; பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

குடியரசு தின விழா: தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா் ஆட்சியர்!

SCROLL FOR NEXT