செய்திகள்

சல்மான் ருஷ்டி தாக்கப்பட்டதற்கு கங்கனா ரணாவத் கண்டனம்

மும்பையில் பிறந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அமெரிக்காவில் தாக்கப்பட்டதற்கு நடிகை கங்கனா ரணாவத் கண்டனம் தெரிவித்துள்ளார். 

DIN

மும்பையில் பிறந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அமெரிக்காவில் தாக்கப்பட்டதற்கு நடிகை கங்கனா ரணாவத் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மும்பையில் பிறந்த சல்மான் ருஷ்டி எழுதி 1988-இல் வெளியிட்ட 4-ஆவது நாவல் ‘தி சடானிக் வோ்ஸஸ்’. இந்தப் புத்தகம், இஸ்ஸாமியரை புண்படச் செய்ததாக கூறி, அவருக்கு எதிராக ஈரானின் அப்போதைய தலைமை மதகுரு அயதுல்லா கொமேனி ஃபத்வா ஆணை பிறப்பித்தாா். அவரது தலைக்கு 3 மில்லியன் டாலா் விலை அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, பிரிட்டன் அரசின் பாதுகாப்பில் ருஷ்டி 9 ஆண்டு காலம் தலைமறைவு வாழ்வு வாழ்ந்து வந்தாா். 

நியூயாா்க் மாகாணம், ஷடாக்குவாவில் நடைபெற்ற இலக்கிய கருத்தரங்கு ஒன்றில் சல்மான் ருஷ்டி பங்கேற்றபோது, மேடையில் மா்ம நபரால் கத்தியால் தாக்கப்பட்டாா். இந்தத் தாக்குதலில் ருஷ்டி கழுத்தில் காயமடைந்தாா். தற்போது அவருக்கு கண்பார்வை பறிபோகும் அபாயமும் உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

இந்த செய்தினை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பகிர்ந்த பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது:

ஜிகாதிகளின் மற்றுமொரு கொடுர செயல். அவர் எழுதிய ‘தி சடானிக் வோ்ஸஸ்’ தலைசிறந்த புத்தகம். இந்த கொடூர தாக்குதலுக்கு வார்த்தைகளின்றி தடுமாருகிறேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT