செய்திகள்

'ஜெயிலர்' அப்டேட் - முதன்முறையாக ரஜினிக்கு ஜோடியாகும் இளம் நடிகை

ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக இளம் நடிகை ஒருவர் நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

DIN

ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக இளம் நடிகை ஒருவர் நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

பொதுவாகவே சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களில் நடிக்கும் நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பை படம் துவங்கும் முன்பே வெளியிட்டுவிடுவார்கள். ஆனால் ஜெயிலர் படத்தை பொறுத்தவரை இயக்குநராக நெல்சனும், இசையமைப்பாளராக அனிருத் மட்டுமே இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளார்கள். 

இதன் காரணமாக ஜெயிலர் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து நாளுக்கு நாள் பல்வேறு தகவல்கள் பரவிவருகின்றன. முதலில் இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என்று கூறப்பட்டது. எந்திரன் படத்துக்கு பிறகு சன் பிக்சர்ஸ், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் கூட்டணி இணையவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். 

மேலும் இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும், சிவகார்த்திகேயன் சிறப்புத் தோற்றத்தில் வருவார் எனவும் கூறப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் வசந்த ரவி வில்லனாக நடிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது. 

இதில் உச்சகட்டமாக ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. நடிகை தமன்னா 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழில் நடித்து வருகிறார். அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, விக்ரம், விஷால் என பெரும்பாலான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார்.

ரஜினியுடன் மட்டும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் இருந்தது. தற்போது ஜெயிலர் மூலம் அந்த வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT