திரைப்படப் பத்திரிகையாளர் மறைவு: தனுஷ், அனிருத், கீர்த்தி சுரேஷ் இரங்கல்
தனுஷ், கார்த்தி, கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், இயக்குநர்கள் மிஷ்கின், வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்களும்...
செய்திகள்திரைப்படப் பத்திரிகையாளர் மறைவு: தனுஷ், அனிருத், கீர்த்தி சுரேஷ் இரங்கல்
தனுஷ், கார்த்தி, கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், இயக்குநர்கள் மிஷ்கின், வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்களும்...
திரைப்படப் பத்திரிகையாளர் கெளசிக்கின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
35 வயது கெளசிக், திரைப்படப் பத்திரிகையாளராக அறியப்பட்டவர். சமூகவலைத்தளங்களில் திரைப்படச் செய்திகள், வசூல் விவரங்களைத் தொடர்ந்து அளித்து வந்ததால் ட்விட்டரில் 4 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
இந்நிலையில் மாரடைப்பு காரணமாக கெளசிக் நேற்று காலமானார். இதையடுத்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்களும் தனுஷ், கார்த்தி, கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், இயக்குநர்கள் மிஷ்கின், வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்களும் கெளசிக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.