செய்திகள்

தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட தமிழ் பட நடிகை

தமிழ் பட நடிகை ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

தமிழ் பட நடிகை ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான 'பத்தாயிரம் கோடி' படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானவர் கனிஷ்கா சோனி. 'யுவராஜ்யம்' என்ற தமிழ் படத்திலும் கனிஷ்கா நடித்துள்ளார்.

நிறைய ஹிந்தி டிவி தொடர்கள், நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரபலமான கனிஷ்கா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அறிவிப்பில் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டுள்ளதாக கனிஷ்கா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதிய பதிவில், ''நான் நேசிக்கும் ஒரு நபர் நான் மட்டுமே. எனக்கு எந்த ஆணும் தேவையில்லை. தனிமையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் கிட்டாருடன் நேரத்தை செலவிடுகிறேன்.

சிவா சக்தி என அனைத்தும் என்னுள்ளே இருக்கின்றன. நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது நெற்றியில் திருமணம் முடிந்ததற்கான அடையாளமாக குங்குமம் வைத்திருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். 

இதுதொடர்பாக விளக்கமளித்து கனிஷ்கா வெளியிட்டுள்ள விடியோவில், கல்யாணம் என்பது உடலுறவு பற்றியதில்லை. அன்பும் நேர்மையும் பற்றியது. நான் இவற்றை எதிர்பார்த்து என் நம்பிக்கையை இழந்துவிட்டேன். அதனால் நான் தனியாக வாழ்வது என முடிவெடுத்துவிட்டேன். என்று குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக குஜராத்தைச் சேர்ந்த 24 வயது பெண் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில் காவலாளிகள் கொலை வழக்கு: கைதானவா் தப்ப முயன்ற போது காயம்

லாரி மீது மற்றொரு லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

மத்திய பாஜக அரசின் பிடியில் சிக்கித் தவிக்கிறது தோ்தல் ஆணையம்: முத்தரசன்

வத்திராயிருப்பு அருகே 20 ஆண்டுகளாக மின் இணைப்பின்றி கிராம மக்கள் அவதி

ஆா்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் நீா்மட்டம் குறைவதால் விவசாயிகள் கவலை

SCROLL FOR NEXT