செய்திகள்

''காதுகள் பத்திரம்'' - நடிகர் அஜித் அறிவுரை - என்ன காரணம்?

காதுகள் பத்திரம் என நடிகர் அஜித் அவரது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 

DIN

நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்துவருகிறார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுவருகிறது. 

படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள ஏகே 62 திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கும் என்று கூறப்படுகிறது. 

நடிகர் அஜித் குமார் சமீபத்தில் தன்னை தல என்றோ வேறு பட்டப் பெயர்களைக் கொண்டோ அழைக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். ரசிகர்கள் தனது படம் வரும்போது திரையரங்கில் வந்து பார்த்தால் போதும் என்பது அவரது நிலைப்பாடாக இருக்கிறது.

இது ரசிகர்கள் மீது அவர் கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது. அதன் ஒரு பகுதியாக நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்குமாரின் செய்தியை ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.

அவரது பதிவில், ''காதுகளைப் பார்த்துக்கொள்ளுங்கள். என்றும் அன்புடன் அஜித்குமார்'' என்று பதிவிட்டுள்ளார். 'காதுகளில் அடிக்கடி சத்தம் வந்தால் காதுகேட்கும் திறனை இழக்கக் கூடும்'  என்ற விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார். நடிகர் அஜத்தின் அக்கறை ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்...!

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து! 26 பேர் பலி

சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சிறை சென்றார்களா? மோடி விளக்கம்

இந்த வார ஓடிடி படங்கள்!

சூரியவன்ஷி அதிவேக டெஸ்ட் சதம்! 78 பந்துகளில் சதமடித்து ஆஸி.யை அலறவிட்ட சிறுவன்!

SCROLL FOR NEXT