செய்திகள்

பிரிவுக்கு பிறகு முதன்முறையாக ஒரே புகைப்படத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா: நெகிழ்ச்சி சம்பவம்

பிரிவுக்கு பிறகு நிகழ்ச்சி ஒன்றில் தனுஷும் ஐஸ்வர்யாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

DIN

பிரிவுக்கு பிறகு நிகழ்ச்சி ஒன்றில் தனுஷும் ஐஸ்வர்யாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் தனுஷும்,  ஐஸ்வர்யாவும் சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இருவரும் மௌனம் காத்துவருகின்றனர். இந்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்வில் இருவரும் கலந்துகொண்டனர். யாத்ரா தனது பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

அப்போது தங்கள் மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் இயல்பாக  தங்களது மகனை அணைத்த படி இருக்கின்றனர். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரிவுக்கு பிறகும் கூட தங்களது மகனை உற்சாகப்படுத்தும்விதமாக தனுஷ் - ஐஸ்வர்யா இணைந்து கலந்துகொண்டது அவர்களை நல்ல பெற்றோர்களாக அடையாளம் காட்டுவதாக ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உளவுத்துறையில் வேலை வேண்டுமா?: டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

பாமக பெயர், சின்னம் விவகாரம்: நீதிமன்றத்தில் ராமதாஸ் கேவியட் மனுக்கள் தாக்கல்!

உணவகம் சென்ற டிரம்புக்கு சங்கடம்! நவீன கால ஹிட்லர் என மக்கள் கோஷம்!!

ரேபரேலியில் ராகுல் காந்தி!

ஃபஹத் ஃபாசில் - பிரேம் குமார் கூட்டணியில் புதிய படம்!

SCROLL FOR NEXT