செய்திகள்

பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி

இயக்குநர் பாரதிராஜா திடீர் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

DIN

இயக்குநர் பாரதிராஜா திடீர் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழின் புகழ்பெற்ற இயக்குநரான பாரதிராஜா தற்போது முழு நேர நடிகராக மாறி குணச்சித்திர வேடங்களில் கலக்கிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் தாத்தவாக பாரதிராஜா நடித்திருந்தார். 

இவர் பேசும் வசனங்களுக்கு திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் விசில் பறக்கின்றனவாம். சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற விருமன் பட இசை வெளியீட்டு விழாவிலும் பாரதிராஜா கலந்துகொண்டு உற்சாகமாக பேசினார்.

இந்த நிலையில் பாரதிராஜா திடீர் உடலக்குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கவலைப்பட ஏதுமில்லை எனவும் 4 நாட்களில் பாரதிராஜா வீடு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

பூ, புதிதாய் பூத்திருக்கு... ஸ்வாதி சர்மா!

சர்வதேச சாதனை நாயகி... ஸ்மிரிதி மந்தனா!

ஜெயபிரகாஷ் நாராயண் பூா்விக வீட்டைப் பாா்வையிட்டாா் குடியரசு துணைத் தலைவா்

SCROLL FOR NEXT