செய்திகள்

ஆலியா பட்டை கடுமையாக விமர்சிக்கும் ஹிந்தி ரசிகர்கள் - அப்படி என்ன சொன்னார் ?

ஆலியா பட் திமிராக பேசியதாக அவரை ஹிந்தி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். 

DIN

ஆலியா பட் திமிராக பேசியதாக அவரை ஹிந்தி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். 

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இணைந்து நடித்துள்ள பிரம்மாஸ்திரா ( தமிழில் பிரம்மாஸ்திரம் ) வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாகிறது. படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இருவரும் கலந்துகொண்டுவருகின்றனர். 

வாரிசு நடிகை உள்ளிட்ட ஆலியா பட் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு நேர்காணலில் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆலியா, என்னைப் பிடிக்கவில்லையென்றால் பார்க்காதீர்கள் என்று பதிலளித்துள்ளார். 

இது  ஹிந்தி ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. இதனையடுத்து பிரம்மாஸ்திரா படத்தைப் புறக்கணியுங்கள் என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் டிரெண்ட் செய்துவருகிறார்கள். 

முன்னதாக பிகே படத்தில் ஹிந்து கடவுள்களை ஆமிர் கான் விமர்சித்ததாக அவரது படமான லால் சிங் சத்தா படத்தைப் புறக்கணியுங்கள் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர். அதற்கேற்ப விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற அந்தப் படம், வசூல் ரீதியாக தோல்வியடைந்தது. ஆலியா பட்டின் பேச்சு பிரம்மாஸ்திரா படத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிட்வா புயலால் கனமழை - புகைப்படங்கள்

கேரள முதல்வருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்: ‘பாஜகவின் அரசியல் விளையாட்டு’ -ஆளும் கம்யூ. விமர்சனம்

ரெட் அலர்ட்... சனம் ஷெட்டி!

கண் காணா அழகு... நபா நடேஷ்!

ஹலோ டிசம்பர்... அஞ்சு குரியன்!

SCROLL FOR NEXT