முகப்பு
செய்திகள்

''என்னை மன்னிச்சிடுங்க'' - 'குருதி ஆட்டம்' இயக்குநர் வருத்தம்

குருதி ஆட்டம் பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் ரசிகர்களிடம் மன்னிப்புக்கேட்டார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

குருதி ஆட்டம் பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் ரசிகர்களிடம் மன்னிப்புக்கேட்டார். 

'8 தோட்டாக்கள்' படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஸ்ரீகணேஷ் அடுத்ததாக இயக்கிய படம் குருதி ஆட்டம். அதர்வா நாயகனாக நடித்திருந்த இந்தப் படத்தில் பிரியா பவானி ஷங்கர், ராதிகா, ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 

யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். கடந்த 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இந்த நிலையில் படத்தின் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் தனது முகநூலில் ரசிகர்களிடம் மன்னிப்புக்கேட்டுள்ளார். அதில், ''குருதி ஆட்டம் வெளியீட்டின்போது ஆதரவளித்த எல்லோருக்கும் நன்றி. என்னிடம் சொல்வதற்கு வார்த்தைகளில்லை. 

இந்தப் படத்தில் இருக்கும் குறைகளுக்காக என்னை மன்னியுங்கள். கடினமாக உழைத்து என் அடுத்த படத்தை மிக சிறந்த படமாக கொடுப்பேன். குருதி ஆட்டம் திரையரங்கில் பார்க்க தவறியவர்களுக்காக வருகிற செப்டம்பர் 2 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →