செய்திகள்

மீண்டும் திரைக்கு வருகிறது ‘அவதார்’

அவதார் திரைப்படம் புதிய தொழில்நுட்பத்துடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

DIN

அவதார் திரைப்படம் புதிய தொழில்நுட்பத்துடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். 

25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலை அள்ளியது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையையும் இத்திரைப்படம் நிகழ்த்தியது. 

கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து  இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.  முதல் பாகத்தைப் போல மிகச் சிறப்பான காட்சி அனுபவத்துடன் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இரண்டாம் பாகத்தினைப் பார்ப்பதற்கு முன் 3டி தொழில்நுட்பத்தில் 4கே (4k) தரத்தில் மீண்டும் ஒருமுறை திரையரங்குகளில் அவதார் படத்தை வெளியிட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் முடிவு செய்துள்ளார். அதனால், வருகிற செப்.23 ஆம் தேதி முதல் உலகமெங்கும் சில நாள்கள் இப்படம் திரையரங்குகளில் ஒளிப்பரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.92 ஆக நிறைவு!

மக்களை ஏமாற்றும் தமிழின துரோகி ஸ்டாலின்: இபிஎஸ்

திமுக கூட்டணியில் பல பிரச்னை: எடப்பாடி பழனிசாமி

கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT