செய்திகள்

நடிகையைத் திருமணம் செய்துகொண்ட 'சூரரைப் போற்று' ஒளிப்பதிவாளர்

சூரரைப் போற்று பட ஒளிப்பதிவாளருக்கும் பிரபல நடிகைக்கும் சமீபத்தில் சென்னையில் திருமணம் நடைபெற்றது. 

DIN

சூரரைப் போற்று பட ஒளிப்பதிவாளருக்கும் பிரபல நடிகைக்கும் சமீபத்தில் சென்னையில் திருமணம் நடைபெற்றது. 

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த  சூரரைப் போற்று திரைப்படம் சமீபத்தில் 5 தேசிய விருதுகளை அள்ளியது. இந்தப் படத்துக்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருந்தார். 

நிகேத் பொம்மி சமீபத்தில் நானி, நஸ்ரியா இணைந்து நடித்த அன்டே சுந்தரானிக்கி படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படத்தில் அவரது பணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

இந்த நிலையில் இவருக்கும் தெலுங்கு நடிகை மெர்சி ஜான் என்பவருக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். இதனையடுத்து இருவருக்கும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

மெர்சி ஜான் சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான மாடர்ன் லவ் இணையத் தொடரில் நடித்திருந்தார். மேலும் தெலுங்கு படங்களில் பின்னணி குரல் கலைஞராகவும் பணியாற்றிவருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட்டில் நான்... சாக்‌ஷி மாலிக்!

ஈரானிடம் தோற்ற இந்திய அணி! இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்ததா?

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! -சுதர்சன் ரெட்டி

இந்தியாவுடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு: டிரம்ப்

நான் மெஸ்ஸி கிடையாது..! தங்கப்பந்து விருது வென்ற ரோட்ரி பேட்டி!

SCROLL FOR NEXT