முகப்பு
செய்திகள்

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் நிலையில் இயக்குநர் பாரதிராஜா அறிக்கை

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Updated On : 27 ஆகஸ்ட், 2022 at 5:53 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:40 PM

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''வணக்கம், நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல் நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்றுவருகிறேன். 

Advertisement

மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வரவேண்டாம் என்று என் அன்பு கொண்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன். 

மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசியிலும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.