பிரபல நடிகரின் ரசிகர்களால் மதுவுக்கு அடிமையானதாக நடிகை ஒருவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்ஜூனாவின் மனம், மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தேஜஸ்வி. பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியராக கலந்துகொண்டார்.
கௌசல் மண்டா என்பவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து கௌசல் மீது நடிகை தேஜஸ்வி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | 'நட்சத்திரம் நகர்கிறது' படம் பார்த்து ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டிய ஹிந்தி இயக்குநர்
சமீபத்தில் கமிட்மென்ட் என்ற பட நிகழ்வு ஒன்றில் பேசிய தேஜஸ்வி, கௌசலின் ரசிகர்கள் தன்னை மிகவும் மோசமாக பேசியதாகவும் இதன் காரணமாக மிகுந்த அழுத்தம் ஏற்பட்டு மதுவுக்கு அடிமையானதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது அதிலிருந்து அவர் மீண்டுவருவதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக சினிமாவில் அறிமுகமானபோது பாலியல் ரீதியான அழைப்புகள் வந்ததாக கூறி தேஜஸ்வி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.