முகப்பு
செய்திகள்

’த்ரிஷ்யம் 3’ உறுதி!

த்ரிஷ்யம் மூன்றாம் பாகம் உருவாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Updated On : 30 ஆகஸ்ட் 2022, 11:53 am IST
பகிர்:

த்ரிஷ்யம் மூன்றாம் பாகம் உருவாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான ‘த்ரிஷ்யம்’ , ‘த்ரிஷ்யம் 2’ ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் 3-ஆம் பாகம் குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.

நேர்காணல்கள், சந்திப்புகளில் ஜித்து ஜோசப்பிடம் ’த்ரிஷ்யம் 3’ குறித்து அதிகக் கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன.

Advertisement

Advertisement

இந்நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் ஆசிர்வாத் சினிமாஸ் - ஆண்டனி பெரும்பாவூர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ‘த்ரிஷ்யம் 3’ உறுதி எனக் கூறியுள்ளார்.

தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபடும் இளைஞரை  ஜார்ஜ் குட்டி(மோகன்லால்) மகள் அடித்துக் கொல்கிறாள். இந்தக் கொலையை மறைக்க ஜார்ஜ் தன் குடும்பத்தினருடம் எதிர்கொள்ளும் சவால்கள் எதிர்பாராத திருப்பங்கள் என த்ரிஷ்யம் கதைகள் உருவாக்கப்பட்டிருந்தது. மூன்றாம் பாகம் அதன் இறுதி பாகமாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.