செய்திகள்

பிரபல மலையாள இசையமைப்பாளர் மரணம்

DIN

மலையாளம், கன்னட மொழிகளில் இசைமைத்த பிரபல இசையமைப்பாளர் ஜான் பி.வர்கீ உடல் நலக்குறைவால் காலமானார்.

மலையாளத்தில் உன்னா, மசாலா ரீபப்ளிக், ஈடா, கம்மட்டிபாடம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் கிட்டாரிஸ்ட் ஜான் பி.வர்கீ(51). 

கேரளத்தை பூர்விகமாகக் கொண்ட இவர் கன்னடத்திலும் சில படங்களுக்கு இசையமைத்ததுடன் சில ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். கம்மட்டிபாடத்தில் இடம்பெற்ற ‘புழு புலிகள்’ பாடல் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில், கடந்த 29 ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவால் ஜான் மரணமடைந்தார். 

அவருடைய மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT