சில்க் ஸ்மிதா 
செய்திகள்

மறைந்து 26 ஆண்டுகள்... இன்றும் டிரெண்டிங்கில் 'சில்க் ஸ்மிதா'!

தமிழ் சினிமாவில் குறைந்த இடைவெளியில் அதிக அளவிலான ரசிகர்களைப் பெற்ற நடிகைகளின் பட்டியலில் சில்க் ஸ்மிதா என்றும் தனித்த இடத்தைப் பிடித்திருப்பார்.

DIN

மறைந்து 26 ஆண்டுகள் ஆனாலும் தனது பிறந்தநாளன்று சில்க் ஸ்மிதா என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 

சில்க் ஸ்மிதா, பிறந்தநாள் வாழ்த்துகள் சில்க் ஸ்மிதா, என்ற இரு ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் குறைந்த இடைவெளியில் அதிக அளவிலான ரசிகர்களைப் பெற்ற நடிகைகளின் பட்டியலில் சில்க் ஸ்மிதா என்றும் தனித்த இடத்தைப் பிடித்திருப்பார்.

அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் அவர் நடித்திருந்தார். இதனால் அவரை அறியாத சினிமா ரசிகர்கள் இல்லை என்றே கூறலாம்.

இவர் 17 ஆண்டுகளில் 5 மொழிகளில் 450க்கும் அதிகமான படங்களில்  நடித்துள்ளார். சில்க் ஸ்மிதாவுக்கு இன்று (டிச.2) 62வது பிறந்தநாள். சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளையொட்டி அவரின் ரசிகர்கள் வித்தியாசமான முறைகளில் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

தூய்மைப் பணியாளர்களுக்கு புதுத்துணி கொடுத்தும், டீக்கடைகளில் கேக் வெட்டியும் பலர் சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். ஈரோட்டில் ஒரு டீக்கடை முழுக்க அவரின் புகைப்படங்களே இடம்பெற்றுள்ளன. 

மறைந்து 26 ஆண்டுகள் ஆன பிறகும் ஒரு நடிகையின் பிறந்தநாள் இத்தனை விமரிசையாக கொண்டாடப்படுவது இதுவே முதல்முறை. மறைந்தும் மறையாமல் இருக்கும் திரைப்பிரபலங்களில் சில்க் ஸ்மிதாவிற்கு எப்போதும் தனித்த இடம் உண்டு என்பதை இதன் மூலம் அறியலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 எலிகளுடன் விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்த சீனாவின் இளம் வீரர் குழு!

தெரியாத நபரிடமிருந்து Friend Request! SCAM-ல் சிக்க வேண்டாம்! | Cyber Shield | Cyber Security

வேலூர்: மலைப் பகுதியில் யானையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

செங்கோட்டையன் VS இபிஎஸ் | யார் B Team? | ADMK | TTV | Sasikala | OPS

வாழ்வின் பாதை இவ்வுலகம்... கிருத்திகா காம்ரா!

SCROLL FOR NEXT