செய்திகள்

தீ தளபதி: தெறியான போஸ்டரை வெளியிட்ட வாரிசு படக்குழு!

வாரிசு படத்தின் இரண்டாவது பாடலான் ‘தீ தளபதி’க்கு புதிய போஸ்டரை வெளியிட்டுளது வாரிசு படக்குழு.

DIN

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். 2023 பொங்கலுக்கு வெளியாகும் இந்தத் திரைப்படத்திற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு தேதியை படக்குழுவினர் அறிவித்தனர்.   

அதன்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது. இந்தப் பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது. அதனால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் தற்பொது தீ தளபதி பாடலுக்கு புதிய அனல் பறக்கும் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. ரசிகர்கள் இந்த போஸ்டரை கொண்டாடி வருகின்றனர். 

ஏற்கெனவே முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் யூடியூபில் வெளியாகி 78 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில் இரண்டாவது பாடலான ‘தீ தளபதி’ அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக புதுவையில் விஜய் சாலைவலம்! எப்போது?

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

இந்திய அரசியலமைப்பு நாள்: சில அழியா நினைவலைகள்!

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

SCROLL FOR NEXT