செய்திகள்

அஜித்தா! விஜய் கொடுத்த ரியாக்‌ஷன்.. பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்

நடிகர் அஜித் குமாரின் துணிவு படத்தின் ரிலீஸ் குறித்து நடிகர் விஜய் அளித்த பதிலை பிரபல நடிகர் ஷியாம் பகிர்ந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

DIN

நடிகர் அஜித் குமாரின் துணிவு படத்தின் ரிலீஸ் குறித்து நடிகர் விஜய் அளித்த பதிலை பிரபல நடிகர் ஷியாம் பகிர்ந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் அஜித் இணைந்துள்ளார். இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

அதேபோல், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலிவுட்டின் இரண்டு பெரும் நட்சத்திரங்களின் படம் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து இரண்டு படக்குழுவினரும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், வாரிசு படத்தில் நடித்துள்ள பிரபல நடிகர் ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

‘துணிவு படம் ரிலீஸ் அறிவிப்பு வெளியான போது, விஜய் அண்ணாவுக்கு போன் செய்து துணிவும் பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆகுது என்று சொன்னேன். அதற்கு எந்த பதற்றமுமின்றி பதிலளித்த விஜய் அண்ணா, ஹே.. ஜாலி பா.. வரட்டும் பா.. நம்ம நண்பர் தானே.. அந்த படமும் நல்லா போகட்டும், நம்ம படமும் நல்லா போகட்டும் என்றார்.’ என்று ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

அஜித்தின் துணிவு குறித்து நடிகர் விஜய்யின் தொலைபேசி உரையாடலை பகிர்ந்து கொண்ட ஷ்யாமின் காணொலி தற்போது ரசிகர்களால் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

SCROLL FOR NEXT