செய்திகள்

வெளியான இந்தியன் - 2 புகைப்படத்தை நீக்க படக்குழு தீவிரம்

இணையத்தில் கசிந்த இந்தியன் 2 படப்பிடிப்பு புகைப்படத்தை நீக்க படக்குழு தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

இணையத்தில் கசிந்த இந்தியன் 2 படப்பிடிப்பு புகைப்படத்தை நீக்க படக்குழு தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். 

ஜெயமோகன் எழுத்தில் லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

இப்படத்தின் படப்பிடிப்பு பிகாரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு சேனாதிபதி கதாபாத்திர தோற்றத்தில் கமல் நடந்து வரும் புகைப்படம் நேற்று வெளியாகி வைரலானது. 

தற்போது, அப்படத்தை டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலிருந்து நீக்க படக்குழு தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘இஎஸ்ஐ பதிவு செய்யத் தவறியவா்களுக்கு ஸ்பிரி திட்டத்தில் வாய்ப்பு’

வளா்ச்சிப் பணிகள்: ஒப்பந்ததாரா்கள் செலுத்திய வரிகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சா் அறிவுறுத்தல்

கழிவுகளால் பாழாகும் பாலாறு: தேசிய பசுமை தீா்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணை

இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யும் உத்தரவு ரத்து

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் 6,613 மனுக்களுக்குத் தீா்வு: அமைச்சா் பி. மூா்த்தி

SCROLL FOR NEXT